Homeசமையல் குறிப்புகள்கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் செய்வது எப்படி..! ட்ரை பண்ணி பாருங்க வேற லெவல இருக்கும்..!

கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் செய்வது எப்படி..! ட்ரை பண்ணி பாருங்க வேற லெவல இருக்கும்..!

கோடை காலம் தாெடங்கிவிட்டால் வெப்பத்தை சமாளிப்பது பெரும் சிரமமாகிவிடுகிறது. கோடை காலத்தை கடத்துவது என்பது பெரும்பாடு தான். 100 டிகிரி அதிகமான வெப்பத்தை பெரியவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் குழந்தைகள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதே பெரும் சாவால் தான். வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு குளிர்ச்சியான பழங்கள், உணவுகள், பானங்கள் எடுத்துக்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு (kerala special nimbu juice) நல்லது என்றே கூறலாம்.

இந்நிலையில் நாம் கோடை காலத்தில் எத்தனையோ வகை பழச்சாறு செய்து குடிப்போம். மாறாக உடனடியாக செய்ய வேண்டும் என்றால் எழுமிச்சை பழ ஜூஸ் செய்து உடலை குளிர்ச்சியடையச் செய்வோம். இந்நிலையில் (Kerala special lime juice) வழக்கமாக செய்யும் இந்த பானங்களுக்கு மாறாக கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் (kerala special nimbu juice seivathu eppadi) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சைப்பழம் – 1
  • தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
  • புதினா – சிறிதளவு
  • நாட்டுச் சக்கரை – 5 டேபுள் ஸ்பூன்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இஞ்சியை தோல் நீக்கி நீளமான வாக்கில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு எழுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு பிழிந்த எழுமிச்சை பழ தோலை எடுத்து காய்கறி துருவலில் வைத்து துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு புதினாவை எடுத்து அதன் இலைகளை நீரில் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது ஒரு மிக்சி சாரில் துருவிய தேங்காய், இஞ்சி, எழுமிச்சைப்பழ தோல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் நாட்டுச்சக்கரை, கால் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
  • பிறகு இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு, இதில் தேவையான அளவு குளிர்ந்த நீர் சேர்த்து, அதன்பின் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைப்பழ சாறு சேர்க்க வேண்டும். பிறகு இதில் இரண்டு, மூன்று புதினா இலைகளை சேர்த்தால் சுவையான கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் தயார்.
kerala special nimbu juice seivathu eppadi
கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் செய்வது எப்படி..! ட்ரை பண்ணி பாருங்க வேற லெவல இருக்கும்..!

கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜூஸ் (kerala special nimbu juice seivathu eppadi) செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Type: Drink

Cuisine: Indian

Keywords: kerala special nimbu juice, Kerala special lime juice, kerala special nimbu juice seivathu eppadi

Recipe Yield: 3

Preparation Time: PT5M

Cooking Time: PT10M

Total Time: PT15M

Recipe Ingredients:

  • Lemon – 1
  • Grated coconut - 2 tbsp
  • Mint - a little
  • Country Sugar – 5 Tablespoon
  • Ginger - small piece
  • Salt as needed

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா..! சூப்பர் டேஸ்ட்ல இனி வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular