Homeஆன்மிகம்Mahalaya Amavasya 2024: சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம் என்ன?

Mahalaya Amavasya 2024: சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம் என்ன?

Mahalaya Amavasya 2024: நமது ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பெளர்ணமி இன்னும் குறிப்பாக சில முக்கிய தினங்களில் நாம் விரதம் இருப்போம். அந்த நாட்களில் நாம் விரதம் இருந்தால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம். இந்த அமாவாசை, பெளர்ணமி திதிகளில் விரதம் எடுப்பது மிகவும் சிறந்தது.

இந்த அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி அவர்களின் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். இது பொதுவாக எல்லா அமாவாசை நாட்களிலும் நடக்கும். ஆனால் ஒரு சில அமாவாசைகள் பொதுவாக சிறப்பாக இருக்கும், அப்படி மஹாளய அமாவாசை எனப்படும் அமாவாசை அன்று மட்டும் ஏன் அவ்வளவு விஷேசமாக உள்ளது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் (Mahalaya Amavasya 2024 in Tamil) விரிவாக காணலாம்.

பித்ரு பட்சம் அல்லது மஹாளய அமாவாசையின் சிறப்புகள்

இந்த மஹாளய அமாவாசையை பித்ரு பட்சம் அல்லது மஹாளய அமாவாசை என்று கூறுவார்கள் (Mahalaya Amavasya Pitru Paksha). இந்த அமாவாசை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை ஆகும். சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே இந்த மஹாளய அமாவாசையின் (mahalaya amavasya in tamil) தனிப்பெரும் சிறப்பாக திகழ்கிறது.

மஹாளய என்பதற்கு கூட்டாக என்பது பொருள், பட்சம் என்பது 15 நாட்களை குறிக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக நம் வீட்டில் 15 நாட்கள், அதாவது அமாவாசை தொடங்கி பெளர்ணமி வரை நம்முடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

மஹாளய அமாவாசையின் சிறப்புகள்

அமாவாசை தினங்களில் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள் நம் முன்னோர்களுக்கு கூடுதல் சக்தியை கொடுக்குமாம். இந்த தர்ப்பணங்கள் நம் முன்னோர்களை மட்டுமல்லாமல், மாகவிஷ்ணுவையும் நேரடியாக சென்றடைகிறது என்பது ஒரு ஐதீகம். ஒவ்வொரு தர்ப்பணங்களின் போதும் நம் முன்னோர்களை எமலோகத்தில் அழைத்து எமதர்மராஜா தர்ப்பணங்ளை கொடுப்பாராம். அதுமட்டுமல்லாமல் தர்ப்பணங்களின் போது நம் இல்லங்களுக்கு நம் முன்னோர்கள் வருவதாக ஒரு நம்பிக்கை.

மகாளய அமாவாசை அன்று இராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் ஏராளமானோர்கள் புனித நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, பின்னர் இயலாதவர்களுக்கு தானம் வழங்குவார்கள்.

யார் எல்லாம் மஹாளய அமாவாசை கடைப்பிடிக்க வேண்டும்

தந்தையை இழந்தவர்கள் இந்த தர்ப்பணத்தை கொடுக்கலாம். தாத்தா, தாய் வழி தாத்தா, கொள்ளு தாத்தா, தந்தை வழி பாட்டி ஆகியோருக்கு இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. தந்தை இருக்கும்பட்சத்தில் அவர் இதனை கடைப்பிடிக்கலாம்.

கணவன் இழந்த சகோதரிகள் திதி கொடுக்கலாம். கணவனின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், இவ்வாறாக யார் இறந்து போயிருந்தாலும் அவர்களை நினைத்து இந்த மகாளய அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் நல்லது.

மஹாளய அமாவாசையின் படையல் -Mahalaya Amavasya Significance in Tamil

இந்த அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவை சமைத்து படையல் கொடுக்க வேண்டும். படையல் கொடுத்த பிறகு அதில் சிறிதளவு உணவு காக்கை, எறும்புகளுக்கு கொடுக்க வேண்டும். இவைகளுக்கு உணவளிப்பது நமக்கு நம் முன்னோர்களின் பூர்ண ஆசிர்வாதம் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. படையல் கொடுத்து விட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். பிறகு நம் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

நம் கொடுக்கும் இந்த தர்ப்பணம் நம் மூன்று தலைமுறைகளுக்கு பலனை பெற்று தரும். இவ்வாறாக கொடுக்க முடியாதவர்கள் காய்கறிகள், பச்சரிசி, போன்றவற்றை வாழை இலையில் வைத்து பசுமாட்டிற்கு கொடுக்கலாம். இவ்வாறு சிறியதாக செய்தாலும் நம் முன்னோர்களை மகிழ்ச்சியடைய செய்யும். அன்று சிவாலயங்கள் சென்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

காகமும் நம் முன்னோர்களும்

தர்ப்பணம் கொடுத்துவிட்டு, காக்கைக்கு உணவளிக்க வேண்டும். காக்கை சனிபகவானின் வாகனம். பொதுவாக ஒரு விசஷே நாட்களில் காக்கைக்கு உணவளிப்பது நமது வழக்கத்தில் இருந்து தான் வருகிறது. அதிலும் திதி நாட்களில் காக்கைக்கு உணவளிப்பது (what to do on mahalaya amavasya) நம் முன்னோர்களுக்கு உணவளிப்பது போன்றதாகும். அன்று அவர்கள் காக்கை வடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கை.

சனிபகவானின் வாகனம் எமலோகத்தின் எமனின் தூதுவனாக இருக்கும் என்பது ஒரு ஐதீகம் என்பதால், அன்று காக்கைக்கு உணவளித்தால் நம் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

மஹாளய அமாவாசையின் சிறப்புகள் பலன்கள் – Importance of Mahalaya Amavasya

  • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆத்மா திருப்தி அடையும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.
  • வீட்டில் அமைதி, செல்வம், உடல்நலம் போன்றவற்றில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மனநிம்மதி கிடைக்கும்.
  • கண்திருஷ்டி, பில்லி சூனியம் போன்றவைகள் இருந்தாலும், அது எல்லாம் நம் முன்னோர்களின் ஆசிர்வதத்தால் இல்லாமல் போகும்.
  • இதுவரை தர்ப்பணம் கொடுக்காமல் போயிருந்தாலும், இனிவரும் காலங்களில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசிர்வாதங்களை பெறுங்கள். இதன் மூலம் முன் கர்மவினை குறையும்.
மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

Mahalaya Amavasya – FAQS

1.மஹாளய அமாவாசை 2024 எப்போது? mahalaya amavasya 2024 date and time?

அக்டோபர் 02, 2024, புதன்கிழமை. (புரட்டாசி 16), அக்டோபர் 01 இரவு 10.35 முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை

2. மஹாளய அமாவாசையின் சிறப்பு என்ன? What is special about Mahalaya Amavasya?

மஹாளய அமாவாசை என்பது நம் வாழ்வில் பங்களித்த முந்தைய தலைமுறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாள்.

3. மஹாளய அமாவாசைக்கு வீட்டில் என்ன செய்ய வேண்டும்?

அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு, காயத்திரி மந்திரம் கூறவேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் வரை நீர், மோர் எடுத்துக்கொண்டு விரதத்தை தொடங்கலாம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் பால், பழம் உட்கொள்ளலாம்.

4. Is Mahalaya Amavasya Auspicious? மஹாளய அமாவாசை மங்களகரமானதா?

மஹாளய அமாவாசை புனித நாள் என்று கூறலாம். ஏனெனில் அன்று நம் முன்னோர்களை நினைத்து, கடவுளை நினைத்து அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாக பார்க்ப்படுகிறது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular