Homeசமையல் குறிப்புகள்Mango Halwa Recipe : கோடைக்கால ஸ்பெஷல் மாம்பழ அல்வா செய்வது எப்படி…

Mango Halwa Recipe : கோடைக்கால ஸ்பெஷல் மாம்பழ அல்வா செய்வது எப்படி…

Mango Halwa Recipe: கோடை காலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் வெயில் தான். அதன் பிறகு அனைவருக்கும் நினைவுக்கு வருவது கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள். அவ்வாறு கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய மாம்பழத்தை கொண்டு இனிப்பு வகையான அல்வா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த மாம்பழம் ஆனது ஒரு சீசன் பழமாகும். எனவே இது கோடைகாலங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த கோடை காலத்தில் மாங்காய் கொண்டு மாவடு, மாங்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு, மாங்காய் வத்தல், மாங்காய் சட்னி, மாங்காய் பச்சடி போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள்.

அதேபோல் மாம்பழத்தை கொண்டு மாம்பழம் அல்வா, மாம்பழ ஐஸ்கிரீம் மற்றும் மாம்பழ ஜூஸ் போன்றவை செய்ப்படுகின்றன. மாம்பழம் கொண்டு செய்யப்படும் மாம்பழம் அல்வா (Mango Halwa) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாம்பழ அல்வா (Mango Halwa Recipe in Tamil)

மாம்பழம் வடகிழக்கு இந்திய பகுதிகளில் தோன்றியது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மாம்பழங்களின் வகையை பொறுத்து அதன் அளவு, சுவை, தோல் நிறம் மற்றும் சரை நிறம் மாறுபடும். நாம் இன்று செய்ய உள்ள மாம்பழ அல்வாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Mango Halwa Ingredients)

  • பழுத்த மாம்பழம் – 1
  • நெய் – தேவையான அளவு
  • பால் (காய்ச்சி ஆறியது) – 2 டம்ளர்
  • சர்க்கரை – 1/4 கப்
  • சோள மாவு – 1 ஸ்பூன்

மாம்பழ அல்வா செய்முறை (Mango Halwa Seivathu Eppadi)

  • முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு மாம்பழம் மற்றும் தேவையான அளவு சர்க்கரையை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.
  • அதன் பிறகு பால் சேர்த்து மீண்டும் மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
Mango Halwa
  • ஒரு பௌலில் சோள மாவு மற்றும் பாலை சேர்த்து கட்டி விழாதபடி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்து வரும் மாம்பழ விழுதை சிறிது கெட்டியாகும் வரை கிளற வேண்டும். அதன் பிறகு கரைத்து வைத்துள்ள சோளமாவை சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு இறக்க வேண்டும்.
  • அதன் பிறகு ஒரு பௌலில் நெய் தடவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாம்பழ விழுதை பௌலுக்கு மாற்ற வேண்டும். தற்போது சுவையான மாம்பழ அல்வா தயார் (Mango Halwa Recipe).
Mango Halwa Recipe : கோடைக்கால ஸ்பெஷல் மாம்பழ அல்வா செய்வது எப்படி…

இந்த பதிவில் சுவையான மாம்பழ அல்வா செய்வது எப்படி (Mango Halwa Recipe) என்பதை பதிவிட்டுள்ளோம்.

Type: Dessert

Cuisine: India

Keywords: Mango Halwa, Mango Halwa Recipe

Recipe Yield: 5

Preparation Time: PT5M

Cooking Time: PT30M

Total Time: PT35M

Recipe Ingredients:

  • Ripe mango – 1
  • Ghee – required quantity
  • Milk (distilled and cooled) – 2 tumblers
  • Sugar – 1/4 cup
  • Corn flour – 1 spoon

Recipe Instructions: முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மாம்பழம் மற்றும் தேவையான அளவு சர்க்கரையை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்க வேண்டும். அதன் பிறகு பால் சேர்த்து மீண்டும் மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பௌலில் சோள மாவு மற்றும் பாலை சேர்த்து கட்டி விழாதபடி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கொதித்து வரும் மாம்பழ விழுதை சிறிது கெட்டியாகும் வரை கிளற வேண்டும். அதன் பிறகு கரைத்து வைத்துள்ள சோளமாவை சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு இறக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பௌலில் நெய் தடவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாம்பழ விழுதை பௌலுக்கு மாற்ற வேண்டும். தற்போது சுவையான மாம்பழ அல்வா தயார்.

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular