Homeவிளையாட்டுரஞ்சி கோப்பை: 42 வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்..!

ரஞ்சி கோப்பை: 42 வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்..!

96-வது ரஞ்சி கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியானது கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி முதலில் பேட்டிக் செய்தது. இந்த ஆண்டு கோப்பையை மும்பை அணி (Ranji Trophy Champions 2024) வென்றுள்ளது.

மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும் முதல் இன்னிங்சின் முடிவில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறது விதர்பா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதர்பா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக மும்பை அணி தங்களது 2வது இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி மொத்தம் 418 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் விதர்பா அணியில் ஹர்ஷ் துபே சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்திருந்தார். இதை தொடர்நது இன்று காலை இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

இந்த போட்டியில் விதர்பா அணியின் கேப்டனான அக்ஷய் வாட்கர் 102 ரன்களும், ஹர்ஷ் துபே 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்டுகளை இழந்த பின்னர் விதர்பா அணி தடுமாறியது. எனவே 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த அணி ஆல் அவுட் ஆனது.

Ranji Trophy Champions This Year

மும்பை அணியின் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் முஷீர் கான் 2 விக்கெட்டுகளும் மற்றும் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்த அபாரமான விளையாட்டின் மூலமாக மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக மும்பை அணி தனது 42-வது ரஞ்சி கோப்பையை (Ranji Trophy 2024 Champions) வென்றுள்ளது. இந்த 2024-ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை (Ranji Trophy Champions This Year) மும்பை அணி வென்றது. அந்த அணி கோப்பையை 42-வது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: The GOAT: மீண்டும் இணையும் திரிஷா மற்றும் விஜய்..! திரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular