Homeதொழில்நுட்பம்முதல் முறையாக மனித மூளைக்குள் சிப்..! அதையும் விட்டு வைக்கலையா?

முதல் முறையாக மனித மூளைக்குள் சிப்..! அதையும் விட்டு வைக்கலையா?

இந்த நவீன உலகத்தில் அனைத்துப் பொருட்களும் நவீன மயமாக மாறி வருகிறது. இதற்கு ஒரு எல்லை இல்லையா என்றும் அளவிற்கு பல வகையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மனித மூளைக்குள் சிப் பொருத்தப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனித மூளைக்குள் வயர்லெஸ் சிப் (Chip in Human Brain) பொருத்தப்படும். இதன் மூலம் நம் மூளை செய்ய நினைக்கும் செயல்கள் எல்லாம் கணினி செய்யும்.

இதனை முதலில் குரங்குகளுக்கு பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சேதனை வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த சிப் மனித மூளைக்குள் பொருத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிப் மனிதனின் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சிப்பை மனித மூளைக்குள் பொருத்தி பல்வேறு சோதனைகளை நியூராலிங்க் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Chip in Human Brain

அந்த வகையில் தான் தற்போது முதல் முறையாக மனித மூளைக்குள் ஒரு சிப் (Neuralink Chip in Human Brain) பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப் மூலம் அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு பல மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தயுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: IPL 2024: மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular