Homeதொழில்நுட்பம்ஓரம் போ ஓரம் போ..! மீண்டும் அறிமுகமாக உள்ள நோக்கியா நிறுவனத்தின் போன்கள்..!

ஓரம் போ ஓரம் போ..! மீண்டும் அறிமுகமாக உள்ள நோக்கியா நிறுவனத்தின் போன்கள்..!

உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று தான் நோக்கியா. இந்த நிறுவனத்தில் ஃபோன்களை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று தான் கூறவேண்டும். மேலும் பல 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பிராண்டாகவும் இருந்து வந்தது. ஆனால் சில வருடங்களாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சரிவை நோக்கி சென்றது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனமானது விரைவில் எச்எம்டி என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் இந்த நிறுவனமானது நோக்கியா என்னும் பெயரில் புதிய பீச்சர் போன்களை அறிமுகம் (New Model Nokia Phones) செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த அறிமுகத்திற்கான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் படி பார்த்தால் 8-பிட் வெர்ஷனை காண்பிக்கும் படம் உள்ளது. எனவே இந்த முறை ஒரு கிளாசிக் நோக்கியா போன் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இதுகுறித்து வெளியான தகவல்களின் படி நோக்கியா 3310 (Nokia 3310) எனும் மாடல் போன் தான் வெளியாகவுள்ளது என்று தெரிகிறது. மேலும் இந்த நிறுவனம் இந்த மாடல் போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Nokia Phone New Model

இந்த நிறுவனத்தின் மூலம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த நோக்கியா போன் (Nokia Phone New Model) ஆனது மஞ்சள் நிறத்தில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது வரை இந்த புதிய மாடல் நோக்கியா பீச்சர் போனின் (New Nokia Phones) எந்த விதமான அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த போனின் அம்சங்கள் மற்றும் அதன் விலை பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதையும் படியுங்கள்: நிலவில் ரயில் போக்குவரத்து திட்டம்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular