Homeவிளையாட்டுதிடீரென ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..! என்ன காரணம்?

திடீரென ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..! என்ன காரணம்?

உலகின் புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது தான் கிரிக்கெட். இது மிகவும் பிரபலமான விளையாட்டாகவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிரிக்கெட்டில் விளையாட்டில் இடம்பெற்றுள்ள அணிகளின் வீரர்களின் விளையாட்டு தான். உலக அளவில் பல அணிகள் இன்றுவரை விளையாடி வருகிறது. அதில் பல வீரர்கள் விளையாடுகின்றனர். ஆனால் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாவது இல்லை.

இப்படி தங்களின் விளையாட்டு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் பல வீரர்கள். ஆனால் காலங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது பல புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகி வருகின்றனர். எனவே பல முக்கிய வீரர்கள் தங்களின் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபல வீரர் இணைய உள்ளார்.

பிரபலமான அணிகளில் ஒன்றான நியூசிலாந்து அணியின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக (New Zealand Bowler Neil Wagner) இருப்பவர் தான் நீல் வாக்னர். இவர் தனது பந்து வீச்சு மூலம் பல போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் படி நீல் வாக்னர் (New Zealand Player Neil Wagner) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

New Zealand Player Neil Wagner

இவர் மொத்தமாக 64 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 260 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் மற்றும் T20 போட்டிகளில் 95 விக்கெட்களையும், முதல்தர போட்டிகளில் 821 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். எனவே மொத்தமாக அனைத்துப் போட்டிகளையும் சேர்த்து 1176 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீல் வாக்னர் (Neil Wagner) இந்த தலைமுறையில் உள்ள சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் உள்ளார். இவரது ஓய்வு இவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: சிஎஸ்கேவில் தோனியின் சம்பளம் இத்தனை கோடியா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular