Homeசமையல் குறிப்புகள்உடல் சூட்டை தணிக்கும் சுவையான நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி?

உடல் சூட்டை தணிக்கும் சுவையான நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது தொடக்கத்திலேயே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கே அஞ்சும் நிலை தான் உள்ளது. அந்த அளவுக்கு இப்போதோ பல இடங்களில் 100 டிகிரியை தொடும் அளவிற்கு வெயில் அடிக்கிறது. இதற்கு மக்களாகிய நாம் எந்த வழியும் செய்ய முடியாது.

மக்களாகிய நாம் முடிந்தவரையில் நம் உடலை வெயில் மூலம் வரும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தான் வேண்டும். மேலும் இந்த வெயில் காரணமாக நம் உடல் அதிகமாக வெப்பமடையும் எனவே நம்மால் முடிந்தவரையில் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் நம் உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது என்று பலருக்கு தெரிவதில்லை. அந்த அந்த சீசன்களில் விற்கப்படும் அதிகபட்டமான பழங்கள் அந்த காலத்திற்கு ஏற்றவையாக தான் இருக்கும். அந்த வகையில் தான் இந்த கோடை காலத்தில் விற்கப்படும் தர்பூசணி, இளநீர் மற்றும் நுங்கு போன்றவை இந்த காலத்திற்கு மிகவும் சிறந்த பழங்களாக உள்ளது.

இந்நிலையில் இந்த இளநீர் மற்றும் நுங்கு இரண்டையும் வைத்து மிகவும் சுவையான ஒரு சர்பத் எப்படி (Nungu Elaneer Sarbath Recipe in Tamil) செய்வது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

நுங்கு இளநீர் சர்பத் செய்முறை (Nungu Elaneer Sarbath Recipe)

தேவையான பொருட்கள்

  • இளநி – 1
  • நுங்கு – 2
  • பனை வெல்லம் – சுவைக்கு ஏற்ப

செய்முறை

  • முதலில் இளநீரில் இருந்து அதில் உள்ள நீரை எடுத்துக் கொண்டு அந்த இளநீரில் உள்ள வழுக்கையை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நுங்கை தோல் நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இளநீரில் இருந்து எடுக்கப்பட்ட வழுக்கை மற்றும் தோல் நீக்கிய நுங்கு மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றை எடுத்து கூழாக அறைக்க வேண்டும்.
  • இப்போது அரைத்து வைத்துள்ள அந்த கூழில் இளநீரை சேர்த்து கலந்து தற்போது அதில் வெட்டி வைத்துள்ள நுங்கு துண்டுகளை சேர்க்கவும் தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.
  • இப்போது சுவையான இளநீர் நுங்கு சர்பத் தயார்.
Nungu Elaneer Sarbath Seivathu Eppadi

இந்த பதிவில் நாம் நுங்கு இளநீர் சர்பத் எப்படி செய்வது என்பது (Nungu Elaneer Sarbath Seivathu Eppadi) பற்றி பார்த்துள்ளோம். இந்த வெயில் காலத்தில் வெப்பம் காரணமாக அம்மை போன்ற நோய்கள் வரும் இதுபோன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு இந்த சர்பர் உதவும். இதில் நாம் சேர்த்துள்ள நுங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்றே.

இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு ஜில்லுனு தர்பூசணி சர்பத் செய்வது எப்படி..! 5 நிமிடம் போதும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular