Homeஆன்மிகம்Pournami Date 2024: இந்த ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள்..!

Pournami Date 2024: இந்த ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள்..!

Pournami Date 2024: மாதம் முழுவதும் அமவாசை, பெளர்ணமி போன்றவைகள் வந்தாலும் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சில பெளர்ணமி, அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த பெளர்ணமி, அமாவாசை நாட்களில் விரதம் இருந்து வேண்டி கொண்டால் நினைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை.

முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும். வானியலின்படி, சூரியன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு அதாவது (பெளர்ணமி) ஆகும். அப்போது சூரியனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாக விழுகிறது.

நாம் அனைவரும் அமாவாசை திதி அன்று நம் முன்னோர்களுக்காக விரதம் இருப்போம். அப்படி விரதம் இருந்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பது ஐதீகம். அதுபோல பெளர்ணமி திதியும் ஒரு விசஷே நாளாக பார்க்கப்படுகிறது. இந்த பெளர்ணமி திதியில் கிரிவலம் செல்ல உகந்த நாளாகும். எல்லா நாட்களிலிம் கிரிவலம் செல்லலாம் என்றாலும் பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்வது மிகவும் விசஷேசமாகும்.

நாம் இந்த பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான பெளர்ணமி (Purnima Date in Tamil) தினங்களை காண்போம்.

Pournami Date 2024, timing in Tamil

ஆங்கில மாதம், தேதிகிழமைதமிழ் மாதம், தேதிஆரம்பிக்கும் நேரம்முடியும் நேரம்
ஜனவரி 25வியாழக்கிழமைதை 11ஜனவரி 24-ம் தேதி இரவு 10.44ஜனவரி 25-ம் தேதி இரவு 11.56
பிப்ரவரி 24சனிக்கிழமைமாசி 12பிப்ரவரி 23-ம் தேதி மாலை 04.55பிப்ரவரி 24-ம் தேதி மாலை 06.51
மார்ச் 24ஞாற்றுக்கிழமைபங்குனி 11மார்ச் 24-ம் தேதி காலை 11.17மார்ச் 25-ம் தேதி பகல் 01.16
ஏப்ரல் 23செவ்வாய்கிழமைசித்திரை 10ஏப்ரல் 23-ம் தேதி காலை 04.21ஏப்ரல் 24-ம் தேதி காலை 05.54
மே 23வியாழக்கிழமைவைகாசி 10 (சித்ரா பெளர்ணமி)மே 22-ம் தேதி இரவு 07.14மே 23-ம் தேதி இரவு 07.48
ஜூன் 21வெள்ளிக்கிழமைஆனி 07ஜூன் 21 காலை 07.45-ம் தேதி முதல்ஜூன் 22-ம் தேதி காலை 07.19ம்
ஜூலை 21ஞாற்றுக்கிழமைஆடி 05ஜூலை 20-ம் தேதி மாலை 06.10ஜூலை 21-ம் தேதி மாலை 04.51
ஆகஸ்ட் 19திங்கட்கிழமைஆவணி 03ஆகஸ்ட் 19-ம் தேதி அதிகாலை 03.07ஆகஸ்ட் 20-ம் தேதி அதிகாலை 01.09
செப்டம்பர் 17செவ்வாய்க்கிழமைபுரட்டாசி 01செப்டம்பர் 17-ம் தேதி காலை 11.22 செப்டம்பர் 18-ம் தேதி காலை 09.10
அக்டோபர் 17வியாழக்கிழமைபுரட்டாசி 31அக்டோபர் 16-ம் தேதி இரவு 07.56அக்டோபர் 17-ம் தேதி மாலை 05.25
நவம்பர் 15வெள்ளிக்கிழமைஐப்பசி 29நவம்பர் 15-ம் தேதி அதிகாலை 03.53நவம்பர் 16-ம் தேதி அதிகாலை 03.42
டிசம்பர் 15ஞாற்றுக்கிழமைகார்த்திகை 30டிசம்பர் 14-ம் தேதி மாலை 04.17டிசம்பர் 15-ம் தேதி மாலை 03.13 வரை
மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

Purnima Date in Tamil – FAQS

1. பௌர்ணமி அன்று எந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம்?

பௌர்ணமி நாளில், பக்தர் அதிகாலையில் எழுந்து சூரியன் உதிக்கும் முன் ஒரு புனித நதியில் நீராடுகிறார். சிவபெருமானையோ அல்லது விஷ்ணுவையோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிபடலாம்.

2. பௌர்ணமி நாளின் பலன்கள் என்ன? What are the benefits of Pournami day?

பௌர்ணமி உடலில் நேர்மறை ஆற்றலைத் தூண்டுகிறது. பௌர்ணமி விரதத்தின் போது விரதம் இருப்பது சூரியன் மற்றும் சந்திரனின் அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு பக்தருக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular