Homeவிளையாட்டுருத்ராஜின் கேப்டன் பதவி குறித்து ரவிசந்திரன் அஸ்வினின் கருத்து..!

ருத்ராஜின் கேப்டன் பதவி குறித்து ரவிசந்திரன் அஸ்வினின் கருத்து..!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு ஆண்டின் சாம்பியன் அணியான சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. ரசிகர் மத்தியில் இந்த போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நேற்று சென்னை அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டார். இதன் படி சென்னை அணியின் புதிய கேப்டனாக (CSK Team Captain This Season) ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. இது தோனி ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆனால் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து விச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ருதுராஜ் கெய்க்வாட்க்கு சிஎஸ்கே கேப்டன் பதவி (CSK Team Captain Ruturaj Gaikwad) கொடுக்கப்பட்டுள்ளது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ருத்ராஜை சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது, தவிர்க்க முடியாத ஒரு முடிவாகும். மேலும் அனைத்து அணிகளிலும் ஒரு கட்டத்தில் புதிய கேப்டனை கொண்டுவர வேண்டியிருந்தது. எம்எஸ் தோனியை எனக்கு நன்றாக தெரியும். இதனால் புதிய கேப்டன் பொறுப்பு குறித்து ருதுராஜிடம் ஓராண்டுக்கு முன்பே தோனி தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன். அணியை முன்னணியில் வைத்திருப்பது தான் தோனியின் வழக்கம்.

Chennai Super Kings Team Captain

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அணியின் நலனைப் பற்றி அவர் தொடர்ந்து சிந்திப்பார். அதன் காரணமாக தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் (Chennai Super Kings Team Captain) பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த முடிவு சரியாக அமையவில்லை. இந்நிலையில் தான் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னையின் அணியின் கேப்டன் பொறுப்பு கொடுப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்பே ருதுராஜிடம் தோனி பேசியிருப்பார் என்று நான் நினைக்கிறன். ஏனென்றால், ஒரு முடிவு எடுக்க உள்ளார் ஏன்றால் ஒரு வருடத்துக்கு முன்பாகவே தோனி திட்டமிட்டு அதனை செயல்படுத்துவார் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: IPL 2024: மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular