Homeவிளையாட்டுசரித்திர சாதனையை படைத்தார் ரோகித் சர்மா..!

சரித்திர சாதனையை படைத்தார் ரோகித் சர்மா..!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கிய வீரராகவும், அணியின் கேப்டனாகவும் இருப்பவர் தான் ரோகித் சர்மா. இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இவர் பல வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பல சாதனைகளை (Rohit Sharma Record) படைத்துள்ளார். அதேபோல ஒரு சாதனையை (Rohit Sharma New Record) தான் தற்போது நிகழ்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இதன் மூலம் இதுவரை உலகில் ஐந்து கேப்டன்கள் மட்டுமே செய்த சாதனையை தற்போது ஆறாவது கேப்டனாக செய்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் நன்றாக விளையாடிய அணி அதன் பிறகு சரிவை கண்டது. இறுதியில் 218 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினர்.

இதன் மூலம் இப்போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இவர்கள் இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் அடித்தனர். பின்னர் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் சர்மா முதல் நாளின் முடிவு வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.

இதன் மூலம் இவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக 1000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை (Rohit Sharma World Record) பெற்றார். மேலும், 1000 ரன்களை கடந்த இந்திய டெஸ்ட் கேப்டன்கள் என்ற வரிசையில் தற்போது ரோகித் சர்மா 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Rohit Sharma World Record

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 1000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியல்

  • எம்எஸ் தோனி
  • விராட் கோலி
  • கேன் வில்லியம்சன்
  • ஃபாஃப் டு பிளெசிஸ்
  • பாபர் அசாம்
  • ரோகித் சர்மா
இதையும் படியுங்கள்: மகா சிவராத்திரி: இரவு கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular