Homeஆன்மிகம்Somavara vratham..! சிவனின் ஆசிர்வாதம் பெற இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..!

Somavara vratham..! சிவனின் ஆசிர்வாதம் பெற இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..!

Somavaram: சோமவாரம் என்பது திங்கட் கிழமையை குறிப்பதாகும். ஒவ்வொரு திங்கட் கிழமையும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெரும்பாலனோர்கள் சோமவார விரதம் இருப்பார்கள். 16 திங்கள் இந்த விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பாக சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று தான் இந்த சோமவார விரதம். மற்ற மாதங்களை தவிர்த்து கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை Karthika Somavaram 2024 தோறும் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கபடும் இந்த விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிவபெருமானுக்கு கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் மொத்தம் எட்டு என்று ஸ்கந்தபுராணம் கூறுகிறது. அதில் முக்கிய விரதங்களில் ஒன்று தான் இந்த சோவார விரதம். சிவபெருமானுக்கு கார்த்திகை மாதம் உகந்த மாதமாக இருப்பதால் இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் எடுக்கப்படும் விரதம் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. இந்த விரதத்தை (Somavara vratham in Tamil) வாழ்நாள் முழுக்க தொடராலாம். இந்த விரதம் இருந்து வேண்டினால் கஷ்டங்கள் நீங்கி நினைத்தது நடக்கும் என ஒரு ஐதீகம்.

சோமவாரம் குறிப்புSomavaram in Tamil

முதன் முதலில் சந்திர பகவான் தான் இந்த விரதம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் ஒளி இழந்த சாபத்தில் இருந்து மீண்டார் என்றும். அதன் பிறகு சிவபெருமானின் தரையில் அமரும் பாக்கியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து தான் பிறை வளர தொடங்கியது என்றும் ஒரு கருத்து. அதுதான் தற்பொழுது அமாவாசை, பெளர்ணமி என கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திரனுக்கு சோமன் என்று மற்றொரு பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமவரம் விரதம் இருக்கும் முறைகள்Viratham Irukum Murai in Tamil

  • சோமவார விரதம் இருப்பவர்கள் அதிகாலை பெண்கள் எழுந்து தலைக்குளித்துவிட்டு விளக்கேற்றி சிவன் பார்வதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும். இறைவனின் திருமாங்களை சொல்லி வழிபட வேண்டும். அன்றை தினம் சிவன் பார்வதி ஒன்றாக உள்ள படங்களுக்கு வில்வ இலையை கொண்டு பூஜை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். இந்த விரதம் மூலம் திருமண யோகம், குழந்தைபேறு, நோய் நீங்கி நன்மைகள் பல கிட்டும்.
  • இந்த விரதத்தை எடுப்பவர்கள் அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் எடுக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு விரதம் எடுக்க இயலாதவர்கள் பால், பழம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கலாம் அல்லது விரதம் தொடர்ந்த நாட்களில் இருந்து 12 ஆண்டு காலம் வரை கடைப்பிடிக்கலாம்.
  • இந்த விரதத்தை தொடங்கியவர்கள் அன்றைய தினம் மனதிற்குள் நமசிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தால் அவர்கள் வாழ்வில் பல ஐஸ்வர்யங்களும் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது வழக்கம்.
  • இந்த விரதத்தை கணவன், மனைவி என இருவரும் சேர்ந்தே கடைபிடிக்கலாம். இதனால் கணவன், மனைவி இருவரிடையே எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • இந்த விரதம் இருப்பவர்கள் மாலையில் சிவயாலயம் சென்று விளக்கேற்றி அங்கு வில்வ இலைகள் கொண்டும், இலைகள் கிடைக்காதவர்கள் சங்குப் பூ போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்து வரலாம்.
மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

21 திங்கட் கிழமைகள் விரதம் – Somavaram Meaning in tamil

Somavara vratham
  • இவ்வாறு 21 திங்கட் கிழமைகள் விரதம் எடுத்து வருபவர்கள் அவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப விரதத்ததை தொடங்கலாம். நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் விரதத்தை முடித்து Somavaram Fasting கொண்டு இயலாதவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம்.
  • குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க சுமங்கலிகளை அழைத்து ஆசிர்வாதம் வாங்கி அவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கலாம்.
மேலும் படிக்க: மார்கழி திருவாதிரை விரதம்..! Thiruvathirai Viratham in Tamil

Somavaram – FAQS

1. சோமாவரம் என்றால் என்ன?What is the meaning of Somavaram?

சோமவார, திங்கட்கிழமைக்கான சமஸ்கிருத சொல்.

2. Which God is Somavaram? சோமவார விரதத்திற்கு காரணமான கடவுள் யார்?

கார்த்திகை சோமவாரம் என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஆகும்.

3. நோன்பின் போது தூங்கலாமா?Can we sleep during fasting?

உங்கள் உண்ணாவிரதக் காலத்தில் உங்கள் உடலின் ஆற்றல் சமநிலையை நிர்வகிப்பதில் முடிந்தவரை முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் போதுமான தூக்கம் அடங்கும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular