Homeவிளையாட்டுIPL 2024 டைட்டிலுக்கு இத்தனை கோடியா..! நடந்தது என்ன?

IPL 2024 டைட்டிலுக்கு இத்தனை கோடியா..! நடந்தது என்ன?

உலக அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அதிலும் IPL என்றால் செல்லவே தேவையில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு விளையாட்டாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இத்தொடரின் முக்கிய அப்டேட்டான IPL Mini Auction நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல முக்கிய மற்றும் சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடைபெற்றன. சில எதிர்பாரத நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த ஏலத்தில் இதில் இதுவரை நடைபெற்ற எல்லா IPL ஏலத்திலும் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். இந்நிலையில் தான் இந்த IPL தொடர் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலில் IPL தொடரின் Title Sponsor பற்றி வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) தொடருக்கான IPL 2024 Title Sponsor உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை TATA நிறுவனமானது தக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த உரிமைக்கு ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூபாய் 500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Premier League
இதையும் படியுங்கள்: IPL Mini Auction: 10 அணிகளில் உள்ள மொத்த வீரர்கள்..! யார் எந்த அணியில்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular