Homeவிளையாட்டுPro Kabaddi 2024: பிளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள்..! தமிழ் தலைவாஸ் உள்ளதா?

Pro Kabaddi 2024: பிளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள்..! தமிழ் தலைவாஸ் உள்ளதா?

இந்திய பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது தான் கபடி. மேலும் இந்த கபடி போட்டிகள் வருடாவருடம் Pro Kabaddi என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அணிகள் விளையாடும். இதுவரை மொத்தமாக 12 அணிகள் விளையாடி வருகிறது.

இந்த வருடத்திற்கான புரோ கபடி லீக் (Pro Kabaddi 2024) கடந்த நவம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 12 மாநிலத்தின் அணிகள் களமிறங்கியது. இந்நிலையில் தற்போது இத்தொடரின் இறுதி லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கவுள்ளது. இது புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு (Pro Kabaddi 2024 Playoff) முன்னேறும். இதன்படி பார்த்தால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் புனேரி பல்டன் அணியும், இரண்டாம் இடத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் உள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளும் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேரியுள்ளது.

இந்த இரண்டு அணிகளை தொடர்ந்து 3-வது இடத்தில் தபாங் டெல்லி மற்றும் 4-வது குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. மேலும் 5, 6 வது இடங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் உள்ளன. இதனால் இந்த 4 அணிகள் தான் பிளே ஆஃப் சுற்றில் (Pro Kabaddi 2024 Playoff Teams) விளையாடும். பிளே ஆப் சுற்றுகள் (Pro Kabaddi Playoff) வரும் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்க உள்ளது.

Pro Kabaddi 2024 Playoff

Pro Kabaddi 2024 Playoff Teams

1புனேரி பல்டன்
2ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
3தபாங் டெல்லி
4குஜராத் ஜெயண்ட்ஸ்
5ஹரியானா ஸ்டீலர்ஸ்
6 பாட்னா பைரேட்ஸ்
இதையும் படியுங்கள்: சிஎஸ்கேவில் தோனியின் சம்பளம் இத்தனை கோடியா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular