Homeவிளையாட்டுCSK vs GT: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..! அதிரடியாக குறைந்த விலை..!

CSK vs GT: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..! அதிரடியாக குறைந்த விலை..!

இந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகள் நேற்று (22.03.2024) கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்த சீசனின் முதல் போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டின் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை அணி நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனின் தொடக்கத்திலேயே இந்த சீசனில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல தான் நேற்று நடைபெற்ற முதல் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது.

இந்த முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. மேலும் பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. மேலும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட்கள் வெளிசந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் தான் சென்னை அணி அடுத்ததாக குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் தான் நடைபெறுகிறது. இந்த போட்டியானது வரும் 26-ம் தேதி செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை (CSK vs GT Match Ticket Sale) இன்று முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்களின் விலை (CSK vs GT Match Ticket Price) 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CSK vs GT Match Ticket Sale

ஆனால் இந்த CSK vs GT அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை முதல் போட்டியை விட குறைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூபாய் 1700 லிருந்து 7500 ஆக இருந்தது இந்நிலையில் தான் தற்போது இந்த போட்டிக்கான (Chennai Gujarat Match Ticket Price) அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தோனியின் முடிவு..! கண்கலங்கிய சிஎஸ்கே வீரர்கள்..! நடந்தது என்ன?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular