இந்த வருடத்திற்கான புரோ கபடி லீக் (Pro Kabaddi 2024) கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் இந்த தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது இத்தொடரின் இறுதி லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி லீக் போட்டிகள் ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான அதிக ரன்கள் குவித்த ரெய்டர்கள் (Pro Kabaddi Top Ten Raiders) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வருடத்திற்கான இறுதி லீக் சுற்றுகள் அனைத்தும் தொடங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 77 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து 76 புள்ளகளுடன் புனேரி பல்டன் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. 69 புள்ளிகளுடன் தபாங் டெல்லி 3-வது இடத்திலும் 58 மற்றும் 55 புள்ளிகள் முறையே பட்னா மற்றம் குஜராத் அணிகள் நான்கு மற்றும் 5-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போது வரை நிறைவடைந்த போட்டிகளில், அதிக ரைட் புள்ளிகளை எடுத்த டாப் 10 வீரர்களுக்களின் பட்டியல் (Pro Kabaddi 2024 Top Ten Raiders) வெளியாகி உள்ளது. இதனை பார்க்கலாம். இப்பட்டியலில் தபாங் டெல்லி அணியின் ஆஷு மாலிக் 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 213 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் (157) மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ்யின் பவன் ஷெராவத் (151) ஆகிய புள்ளிகளுடன் முதல் 4 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, யூ மும்பாவின் குமான் சிங் (151), தமிழ் தலைவஸின் நரேந்தர் (151), பாட்னா பைரேட்ஸின் சச்சின் (143) ஆகியோர் 5, 6, 7 மற்றும் 8 வது இடங்களில் உள்ளனர்.
Pro Kabaddi 2024 Top Ten Raiders
வ.எண் | வீரர்கள் | புள்ளிகள் |
1 | ஆஷு மாலிக் | 222 |
2 | அர்ஜுன் தேஷ்வால் | 213 |
3 | மனிந்தர் சிங் | 157 |
4 | பவன் ஷெராவத் | 151 |
5 | குமான் சிங் | 151 |
6 | நரேந்தர் | 151 |
7 | சச்சின் | 143 |
8 | நிதின் குமார் | 125 |
9 | அஸ்லம் முஸ்தபா இனாம்தார் | 123 |
10 | பர்தீப் நர்வால் | 122 |
இதையும் படியுங்கள்: இந்திய வீரரை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்..! |