Homeதொழில்நுட்பம்Best Ac 2024: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! Xiaomi- யின் அசத்தலான AC +...

Best Ac 2024: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! Xiaomi- யின் அசத்தலான AC + Heater மாடல்..!

Best Ac 2024: தற்போது வெயில் அனைவரையும் வாட்டி வரும் நிலையில் மின்விசிறியில் இருந்து வரும் காற்று வெப்பக் காற்றாகவே வெளி வருகிறது. அதிலும் கோடை காலத்தில் மின்சாரம் பிரச்சனை வேறு. இந்த கோடை காலத்தை எப்படி சமாளிப்பது என்றே பலரும் எண்ணிக்கொண்டு உள்ளனர்.

இந்த கோடை காலத்தில் புதிதாக ஏசி வாங்க நினைப்பவர்கள் Xiaomi வெளியிட்டுள்ள புதிய வகையான ஏசியை பரிந்துரைக்கலாம். சியோமி புதிதாக மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி என்ற (Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP) புதிய வகை ஏர் கண்டிஷனரை வெளியிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதன் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது சியோமி புதிதாக மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி என்ற வால்ட் மவுண்ட் என்ற புதிய மாடல் ஏசியை அறிமுகம் செய்துள்ளது.

ஏசி என்றதும் இது வழக்கமான ஏசி போன்று என நினைக்க வேண்டாம். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் வெப்பமான நேரத்தில் குளிர்ந்த காற்று பெறுவதற்கும் மற்றும் குளிர் காலத்தில் வெப்பமான காற்றை பெறுவதற்கும் ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இது ஏசி மற்றும் ஹூட்டராக (AC + Heater) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏசி மாடலில் இன்னும் பல சுவரஸ்யமான அம்சங்கள் உள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது. அதாவது பெரும்பாலும் நாம் ஏசி வாங்கினால் நமக்கு பெரும் (vilai kuraintha ac models) கவலையாக இருப்பது மின்சாரம். சந்தையில் வாங்கும் மற்ற ஏசி போல் இல்லாமல் இந்த Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP ஏசியானது வருடத்திற்கு 361 kWh மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏசி மாடலானது (Rapid cooling மற்றும் (Rapid heating) என்ற அம்சத்துடன் வருவதால் வெறும் 30 நிமிடங்களில் உங்கள் அறையை குளிர்விக்கிறது மற்றும் வெறும் 60 வினாடிகளில் உங்களை அறையை வெப்பமடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது 18 டெபிசில் அளவிற்கும் குறைவான இரைசலை கொண்டுள்ளது.

இந்த ஏசி (Lingyun Smart Control Engine) இன்டெலிஜெண்ட் மோட் அம்சத்துடன் வருவதால் உங்களை அறைக்கு ஏற்ற மாடலாக செயல்படுகிறது. இந்த ஏசி OTA மூலம் அப்டேட் செய்யக்கூடிய எதிர்கால சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஏசி Mi Home app, ரிமோட் கண்ட்ரோல், சியோமி ஹைப்பர் ஓஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் போன்ற அம்சங்களில் வேலை செய்கிறது.

இந்த ஏசியை (AC Model2024 details in Tamil) சியோமி தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் (Best Ac in India 2024) மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 27,654 மட்டுமே.

விவரக்குறிப்புகள்- Specifications

Best Ac in India 2024
தயாரிப்பு பெயர்MIJIA
மாடல்KFR-35GW/V1A1
வேலை முறைநிலையான வேகம்
ஏர் கண்டிஷனிங் சக்தி1.5
வேலை முறைநிலையான வேகம்
ஏர் கண்டிஷனிங் வகைசுவரில் பொருத்தப்பட்டது
பொருந்தக்கூடிய பகுதி11㎡ (உள்ளடங்கியது)-20㎡ (உள்ளடக்கம்)
ஆற்றல் திறன் மதிப்பீடுநிலை 1
உட்புற அலகு அளவு879x212x293 மிமீ
உட்புற அலகு பேக்கிங் அளவு950x360x295 மிமீ
வெளிப்புற அலகு அளவு870x331x551mm
வெளிப்புற அலகு பேக்கிங் அளவு930x390x635 மிமீ
உட்புற அலகு எடை (நிகர எடை)10.5 கிலோ
உட்புற அலகு எடை (மொத்த எடை)12.5 கிலோ
வெளிப்புற அலகு எடை (நிகர எடை)30 கிலோ
வெளிப்புற அலகு எடை (மொத்த எடை)34.5 கிலோ
வெப்ப சக்தி1250W
குளிரூட்டும் சக்தி760W
வெப்பமூட்டும் திறன்5000W
குளிரூட்டும் திறன்3500W
உட்புற இயந்திர சத்தம்40dB
வெளிப்புற இயந்திர சத்தம்52dB
Mijia

சியோமி புதிதாக மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி என்ற (Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP) புதிய வகை ஏர் கண்டிஷனரை வெளியிட்டுள்ளது.

Product Brand: Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP

Product Currency: INR

Product Price: 27654

Product In-Stock: InStock

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: Redmi Buds 5: குறைந்த விலையில் அறிமுகம்..! வெறும் 5 நிமிடம் சார்ஜ் பண்ணா போதும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular