Homeஆன்மிகம்Agni Natchathiram 2024: செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன?

Agni Natchathiram 2024: செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன?

அக்னி நட்சத்திரம் Agni Natchathiram 2024 ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த நட்சத்திரம் இந்திய துணைக்கண்டத்தில் வருடாவருடம் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த அக்னி நட்சத்திரம் ஏப்ரல் நடுப்பகுதி மற்றும் மே நடுப்பகுதிக்கு இடையில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வறண்ட வானிலை நிலவும். எப்போது காற்றோட்டமாகவும், நீரோட்டத்துடனும் நமது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திரத்தின் போது மக்கள் பல சடங்குகளை செய்து வருகின்றன. அப்போது அக்னி கடவுளான அக்னியை அவர்கள் பிராத்தனை செய்கின்றனர். ஏனெனில் அப்போதுதான் அக்னி கடவுளை சாந்தப்படுத்தவும், அவருடைய ஆசிர்வாதமும் கிடைப்பதாக ஐதீகம். இந்த பதிவில் (Agni Natchathiram 2024 In Tamil) பற்றி பார்ப்போம்.

அக்னி நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள் – (Agni Natchathiram 2024 In Tamil)

நமது முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அறிவியல் காரணங்களுக்காக சில காரியங்களை செய்ய கூடாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் அது காலப்போக்கில் ஜோதிடத்தின் வழியாக அவர்கள் செய்ய கூடாது என கூறி வந்ததாக மாறிவிட்டது.

உண்மையில் அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்களை செய்யலாம். அந்தக் காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் அக்னி நட்சத்திரம் காலத்தில் சில காரியங்கள் செய்ய சிரமமாக இருக்கும் என்பதால் சில காரியங்களை அக்னி நட்சத்திரம் முடிந்ததும் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளனர். அக்னி நட்சத்திரம் முழுமையும் சூரிய பகவானை குறிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த காலக்கட்டத்தில் சூரிய பகவான் மிகவும் உக்கிரமாக இருப்பதால் சூரிய பகவனால் தரக்கூடிய வேலை வாய்ப்பு, குழந்தை வரம், ஆரோக்கியம், ஆகியவை இந்த காலக்கட்டத்தில் பெறுவது சற்று கடினமாக இருக்கும்.

செய்யக்கூடாதவைகள்

  • விவசாயத்தில் பயிர்கள் விதைப்பு
  • வீட்டு மனை வாங்குவது
  • பூமி பூஜை செய்வது
  • வீட்டு கிரகப்பிரவேசம்
  • பந்தக்கால் நடுவது
  • செடி, கொடி, மரம் போன்றவற்றை வெட்டக் கூடாது
  • ஆறு, குளம், ஏரி போன்றவை அமைக்க கூடாது
  • நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய வேண்டியது

பொதுவாக இந்த காலக்கட்டத்தில் அக்னி நட்சத்திரத்தில் அனைத்து காரியங்களையும் செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சில காரியங்களை செய்யதால் அது அக்னி கடவுளான சூரியனின் பார்வையில் சற்று நல்ல அமைப்பை கொடுக்கும் என்று ஒரு ஐதீகம்.

  • சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு வார்த்தை
  • வாடகைக்கு வீடு மாறலாம்
  • திருமண நிகழ்ச்சி
  • நிச்சயத்தார்தம்
  • வளைகாப்பு
  • பெண் பார்க்க செல்லுதல்

அக்னி நட்சத்திரம் விழா – முருகன் கோயில்

Agni Natchathiram 2024 In Tamil

அக்னி நட்சத்திரத்தில் (Agni Natchathiram in tamil nadu 2024) முருகன் கோயில்களில் விஷேசமாக இருக்கும். அக்னி நட்சத்தின் போது பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகிய இடங்களில் அக்னி நட்சத்திரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின் போது பழனியில் உள்ள முருகன் கோயில்களில் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த காலக்கட்டத்தில் பழனி முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் செய்த பன்னீரை கடைசியாக தீர்த்தம் என பக்கதர்களுக்கு கொடுப்பார்கள்.

அந்த தீர்த்தத்தை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வயல்கள் மற்றும் கேணிகளில் ஊற்றுவார்கள். அக்னி நட்சத்திரம் பொதுவாக சிவபெருமானின் மகன் அதாவது முருகபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் முருகன் கோயில்களில் அபிஷேகங்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் பற்றி வானிலை ஆய்வு மையம் கருத்து

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் அக்னி நட்சத்திரம் என்ற ஒரு வார்த்தையே அதில் இடம்பெறவில்லை என்றேதான் கூறவேண்டும். அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்றவைகள் ஜோதிட ரீதியாகதான் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலத்திற்கும் மற்றும் தென்மேற்கு பருவக் காற்று வீசும் காலத்திற்கு நடுவில் இந்த வானிலை நிலவுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் இது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் வானிலை தான்.

மேலும் படிக்க: கண்கள் துடித்தால் என்ன பலன்..! Kan Thudikkum Palangal in Tamil

அக்னி நட்சத்திரம் – FAQS

1. அக்னி நட்சத்திரத்தின் வேறு பெயர்கள்?

அக்னி நட்சத்திர வெயில், கத்தரி வெயில், சித்திரை வெயில், கோடை வெயில் என பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

2. 2024 ஆண்டில் பொங்கல் தேதி எப்போது? Agni Natchathiram 2024 starting time in tamil?

மே 4 முதல் மே 29 வரை உள்ளது.

3. அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? marriage during Agni Natchathiram in tamil?

அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப காரியங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular