Homeஆன்மிகம்தங்கத்தால் செய்த கொலுசு மற்றும் மெட்டியை பெண்கள் அணியலாமா? அணியக் கூடாதா?

தங்கத்தால் செய்த கொலுசு மற்றும் மெட்டியை பெண்கள் அணியலாமா? அணியக் கூடாதா?

பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள பல வகையான அணிகலன்களை அணிவது உண்டு. இதுபோல பல ஆபரணங்களை அவர்கள் அணிந்தாலும் பெண்களுக்கு கொலுசு மற்றும் மெட்டி தரும் அழகே தனி தான். காலில் மெட்டி மற்றும் கொலுசு அணிவது அழகிற்காக மட்டுமல்ல அதையும் தாண்டி பல விதமான காரணங்கள் உள்ளது. பெண்கள் அனைத்து வகையான நகைகளையும் தங்கத்தில் அணிவது உண்டு. ஆனால் இந்த கொலுசு மற்றும் மெட்டியை மட்டும் வெள்ளியில் தான் பல காலமாக பெண்கள் அணிந்து வருகின்றனர்.

இன்றைய காலத்து பெண்கள் சிலர் கொலுசு மற்றும் மெட்டியை தங்கத்தால் செய்து அணிகின்றனர். ஆனால் இதுபோல தங்கத்தால் ஆன கொலுசு மற்றும் மெட்டிகளை அணியலாமா அணியகூடாத என்ற குழப்பம் பலரிடம் இருந்து தான் வருகிறது. அதற்கான பதிலை நாம் இப்பதிவில் பார்க்கலாம்.

இதனை ஜோதிட ரீதியில் செல்ல வேண்டுமென்றால், நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் நவக்கிரங்களில் ஒவ்வொரு கிரகங்களை குறிக்கிறது என்று செல்லப்படுகிறது. அந்த வகையில் தான் நம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கிறது. அதன் படி பார்த்தால் கால் என்பது சனி பகவானின் அம்சம் என்று செல்லப்படுகிறது.

நாம் அணியும் தங்கம் குரு பகவானின் அம்சம் என்று கூறப்படுகிறது. இதனை தான் நம் முன்னோர்கள் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் குரு ஓரையில் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்படி நாம் வாங்கும் போது குருவின் பூரண அருளும் நம்மை வந்து சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் வீடுகளில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறுவர்.

நம் உடலில் வயிறு பகுதி தான் குருவிற்கான அம்சம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் நாம் தங்கத்தில் திருமாங்கல்யம், செயின், நெக்லஸ், ஒட்டியாணம் உள்ளிட்டவைகளை அணிகிறோம் என்றும் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு குருவின் ஆதிக்கம் கொண்ட தங்கமானது மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் நாம் தங்கத்தை அணிவதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் தங்கத்தை காலுக்கு கீழ் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: Kagam karaiyum palangal: காகம் எந்த திசையில் கரைந்தால் என்ன பலன்..!
Thanga Kolusu Aniyalama

தங்கத்தை காலில் அணிவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் தங்க கொலுசு (Gold Kolusu), தங்க மெட்டி (Gold Metti) அணிய கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி ஜோதிடம் படி சனி மற்றும் குரு என இரண்டு கிரகங்களும் பகை கிரகங்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சனியின் அங்கமான உள்ள காலில் குருவின் அம்சமான தங்கத்தை அணிய கூடாது என்றும் அதற்கு பதிலாக வெள்ளியை அணியலாம் என்றும் கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். தங்க கொலுசு அணியலாமா (Gold Kolusu Podalama Benefits) என்ற கேள்விக்கு நம் முன்னோர்களின் பதிலானது ஆணியகூடாது என்பதாக தான் இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்: Thummal Sagunam: தும்மல் நல்ல சகுனமா.. இல்லை கெட்ட சகுனமா..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular