Homeசமையல் குறிப்புகள்தள தளனு தஞ்சாவூர் தக்காளி ஜாம்..! ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க..!

தள தளனு தஞ்சாவூர் தக்காளி ஜாம்..! ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க..!

இன்றைய காலகட்டத்தில் திருமண வீடுகள் முதல் ஹோட்டல்கள் வரை அணைத்து இடங்களிலும் பிரியாணிக்கு இனிப்பாக பிரட் அல்வா வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த வழக்கம் கடந்த சில வருடங்களாக தான் உள்ளது. அதற்கு முன்னர் வரை பிரியாணிக்கு தக்காளி ஜாம் தான் வைக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இன்றுவரையிலும் தஞ்சாவூரின் இந்த தக்காளி ஜாம் அவ்வளவு பிரபலம். எனவே நாம் இந்த பதிவில் இந்த தக்காளி ஜாம் செய்வது எப்படி (How to Make Thakkali Jam in Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.

தக்காளி ஜாம் செய்வது எப்படி (How to Make Tomato Jam in Tamil)

தேவையான பொருட்கள் (Tomato Jam Ingredients)

  • தக்காளி- 1 கிலோ
  • சக்கரை- 2 கப்
  • நெய்- தேவையான அளவு
  • முந்திரி- 25
  • ஏலக்காய் தூள்- அரை ஸ்பூன்
  • உப்பு- 1 பின்ச்
இதையும் படியுங்கள்: Rasmalai Recipe: பார்க்கும் போதே ருசிக்க தூண்டும் ரசமலாய்… வீட்டிலேயே செய்வது எப்படி..!

தக்காளி ஜாம் செய்முறை (Tomato Jam Recipe in Tamil)

  • முதலில் தக்காளியை எடுத்து நன்றாக கழுவி அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவிடவேண்டும்.
  • இப்போது தக்காளியின் தோல்கள் வெடித்து நன்றாக வெந்திருக்கும். அவை ஆறிய பிறகு தக்காளியின் தோலை உரித்து கொள்ளவும். இப்போது அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அதன் பிறகு அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் சிறதளவு (5 தேக்கரண்டி) நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது அதே நெய்யில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். இந்த கலவை நன்றாக கொதித்து வரும் போது சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அந்த கலவை சற்று கெட்டியான பிறகு 1 சிட்டிகை உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  • பின்னர் நெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது கடைசியாக நன்றாக தொக்கு பதத்திற்கு வந்துவிடும், நிறமும் மாறியிருக்கும்.
  • இப்போது அதில் வறுத்த முந்திரியை சேர்த்தால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தக்காளி ஜாம் தயார்.
Thakkali Jam Seivathu Eppadi

நாம் இப்பதிவில் தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான தக்காளி ஜாம் செய்வது எப்படி (Thakkali Jam Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

தள தளனு தஞ்சாவூர் தக்காளி ஜாம்..! ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க..!

நாம் இப்பதிவில் தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான தக்காளி ஜாம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கவுள்ளோம்.

Type: Dessert

Keywords: Tomato Jam, Thakkali Jam

Recipe Yield: 5

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Tomato- 1 kg
  • Sugar- 2 cups
  • Ghee- As required
  • Cashew – 25
  • Cardamom powder- half spoon
  • Salt- 1 pinch

Recipe Instructions: முதலில் தக்காளியை எடுத்து நன்றாக கழுவி அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவிடவேண்டும். இப்போது தக்காளியின் தோல்கள் வெடித்து நன்றாக வெந்திருக்கும். அவை ஆறிய பிறகு தக்காளியின் தோலை உரித்து கொள்ளவும். இப்போது அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் சிறதளவு (5 தேக்கரண்டி) நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே நெய்யில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். இந்த கலவை நன்றாக கொதித்து வரும் போது சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அந்த கலவை சற்று கெட்டியான பிறகு 1 சிட்டிகை உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். பின்னர் நெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது கடைசியாக நன்றாக தொக்கு பதத்திற்கு வந்துவிடும், நிறமும் மாறியிருக்கும். இப்போது அதில் வறுத்த முந்திரியை சேர்த்தால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தக்காளி ஜாம் தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Laddu Recipe: திருப்பதி லட்டுக்கு இணையான… சுவை மிகுந்த பூந்தி லட்டு செய்வது எப்படி…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular