Homeபொது தகவல்கள்எண்ணம் போல் வாழ்க்கை..! நல்லது நினைத்தால் நல்லது நடக்குமா?

எண்ணம் போல் வாழ்க்கை..! நல்லது நினைத்தால் நல்லது நடக்குமா?

சாதரணமாக நமது வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் ஒரு சிலர் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள், பழமொழிகள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று தான் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது. ஆனால் ஒரு சிலருக்கு இங்கு ஒரு கேள்வி எழும் உண்மையில் நல்லது நினைத்தால் நல்லது நடக்குமா? என்ற கேள்வி.

பொதுவாக நல்லது என்பது என்னவென்றால் நேர்மறையான சிந்தனை தான். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நேர்மறையான, அதாவது நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியாக நம் வாழ்க்கையில் நடக்கும் சில கடினமான சூழ்நிலைகளில் கூட, அதில் நடக்கும் நல்லதை (Ennam Pol Vazhkai Enral Enna) மட்டும் நாம் எடுத்துக்கொண்டால், நாம் அந்த கடினமான சூழ்நிலையை மிக சுலபமாக கடந்துவிடலாம்.

இதனால் நம் வாழ்க்கை நம்பிக்கையான ஒரு கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தி அதற்கான செயல்களை செய்ய நம்மை தூண்டும். இதனால் தான் நம் எண்ணங்கள் எப்பொழுதும் நேர்மறையாக இருந்தால் நம் செய்யக்கூடிய செயல்கள், நேர்மறையாகவும் இருக்கும். அதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். சிந்தனைகள் எப்பொழுதும் நல்லவைகளாக இருந்தால் புதிய விஷயங்களை கற்பதற்கான வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அவ்வாறு தேடி வரும் வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்திக்கொண்டால் நம் வாழ்க்கையில் நினைத்தை அடைய முடியும்.

இன்னும் சிலருக்கு நான் நல்லதை நினைக்கிறேன் (Nallathai Ninaithal nallathe nadakkum quotes) ஆனால் எனக்கு நான் நினைத்தது நடக்கவில்லை என்று சில சந்தேகங்கள் உருவாகலாம். நல்லது நடக்கும் என்று நாம் செய்யும் செயல்களில் சில சமயம் நல்லவை நடக்காவிட்டாலும், கெட்டது நடக்காமல் இருப்பதே நமக்கு நேர்மறையான ஒரு விஷயம் தான். எனவே நாம் நினைத்த காரியம் நடக்க சில நாட்கள் ஆகலாம். ஆனால் கெட்டவைகள் நடக்காமல் இருப்பது நம் செயலுக்கான பிரதிபலிப்பாகும்.

பொதுவாக ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் செயல்தான் நம்முடைய சிந்தனை. நீங்கள் பொதுவாக ஒரு செயலை தொடங்கலாம் என நினைக்கும் போது அந்த விஷயத்தை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என்று பாருங்கள். உங்களால் முடியும் என்று நினைத்தால், கட்டாயம் அதற்கான முயற்சிகளை செய்வீர்கள். ஆனால் முடியாது என நினைத்தால் எதுவுமே செய்யாமல் ஒரே இடத்தில் தான் இருப்போம். எனவே சிந்தனைகள் எப்போதும் நேர்மறையாக இருப்பது (thought facts in tamil) அவசியம்.

நேர்மறையான சிந்தனைகள் எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எனவே நீங்கள் வாழ்க்கையை தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வைத்துக்கொள்ள நல்லதை நினையுங்கள், உங்களின் சிந்தனைகள் செயல்களாக மாறும், உங்கள் செயல்கள் நீங்கள் நினைத்ததை அடைய வழிவகுக்கும்.

Ennam Pol Vazhkai Enral Enna
மேலும் படிக்க: காலில் கருப்பு கயிறு கட்டி இருக்கீங்களா..! அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular