Homeஆன்மிகம்Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரலாறு...!

Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரலாறு…!

Maha Shivaratri 2024: இந்து கடவுளான சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் அல்லது கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் இந்த சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரி இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த சிவராத்திரி சிவனுக்கு மிக உகந்த இரவாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள். இந்த மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

நாம் செய்த பாவங்கள் நீங்கி சிவபெருமான் நம்மை காப்பாற்றுவார் என்றும், அன்றைய தினம் முறையாக விரதத்தை கடைப்பிடித்தால் சிவபெருமானின் பூரண ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்று வாழும்போதே மனநிறைவுடன் வாழலாம் என நம்பப்படுகிறது. நாம் இந்த பதிவில் மகா சிவராத்திரி உருவான வரலாறு,(maha shivaratri history in tamil) விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் அதன் பலன்களை பற்றி (maha shivaratri story in tamil) பார்க்கலாம்.

சிவராத்திரியின் வகைகள் Difference Between Shivratri and Mahashivratri

சிவபெருமானின் ஐந்து முகங்களை காட்டும் விதமாக ஐந்து வகை சிவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. 12 சிவராத்திரிகள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றால் நம் பாவங்கள் அனைத்தும் விலகி கருமவினைகள் நீங்கும் என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

  • நித்திய சிவராத்திரி
  • மாத சிவராத்திரி
  • பட்ச சிவராத்திரி
  • யோக சிவராத்திரி
  • மகா சிவராத்திரி

நித்திய சிவராத்திரி

ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள் உள்ளன. அதில் ஒரு மாதத்தில் வரும் 2 சதுர்த்தசி வருகின்றன. அதாவது தேய்பிறை சதுர்த்தசி, வளர்பிறை சதுர்த்தசி, ஆக ஒரு ஆண்டு முழுவதும் வரும் 24 சதுர்த்தசி தான் நித்திய சிவராத்திரி என்று அழைக்கிறோம்.

மாத சிவராத்திரி – Maha shivaratri meaning in Tamil

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுறது.

பட்ச சிவராத்திரி

தை மாத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்சய சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

யோக சிவராத்திரி

மாதத்தில் திங்கட்கிழமை வரும் சிவராத்திரி யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி தான் அனைத்து சிவனடியார்களாலும், சிவ பக்தர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி வரலாறு

Maha Shivaratri

மகா சிவராத்தரி கொண்டாடுவதற்க காரணங்கள் வெவ்வேறு விதமாக (maha shivaratri varalaru in tamil) கூறப்படுகிறது. மகா சிவராத்திரியை பற்றி புராணங்களும் எடுத்துரைக்கின்றன. அவை திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், கருட புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் போன்றவைகள் எடுத்துரைக்கின்றன.

புராணங்களின் படி

துர்வாச முனிவர் என்பவர் ஒரு சபாத்தை வழங்கினார். அது என்னவென்றால் அனைத்து கடவுளுக்கும் அவர்களின் சக்தி இழந்த போக வேண்டும் என சபித்தார். மும்மூர்த்திகளாக கருதப்படும் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன். இதில் பிரம்மா உயிர்களை படைப்பவர், விஷ்ணு உயிர்களை காப்பவர், சிவன் உயிர்களின் கர்ம வினைகளை கொண்டு அழிப்பவர். அந்த முனிவர் சாபத்தில் இருந்து விடுபட தெய்வங்கள் அனைவரும் விஷ்ணுவை கேட்டுக்கொண்டனர். விஷ்ணு பகவான் ஒரு அமிர்தத்தை பெற கடலை கடையுமாறு கூறினார். தெய்வங்களும் அவ்வாறு கடலை கடைவதற்கு வாசுகி என்ற ஒரு பாம்பை கயிறாக திரித்து ஒரு மலையை மத்தாக மாற்றி சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் ஒரு கடலை கடைந்தனர். அப்போது விஷம் கடல் முழுவதும் பரவ தொடங்கியது.

இதனால் விஷம் கடல் முழுவதும் கலந்துவிட்டது. தேவர்கள் இதனால் உலகில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பயந்து விஷ்ணுவிடம் கூறினார்கள். அனால் விஷ்ணு பகவான் மனிதர்கள் உயிரை காப்பாற்ற சிவபெருமானிடம் அருளுமாறு கூறினார். அவர்கள் சிவபெருமானை நோக்கி ஓடினார்கள். சிவபெருமான் அந்த விஷத்தை முழுவதும் குடித்தார். ஆனால் அவர் அதனை குடிக்காமல் தொண்டையில் வைத்திருந்தார். அப்போது சிவபெருமானின் தொண்டை பாம்பின் விஷத்தால் நீல நிறமாக மாறியது. இதனால் அவர் நீலகண்டன் என அழைக்கப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என கூறப்படுகிறது.

அம்பிகை உமாதேவி

பிரளய காலத்தின் போது பிரம்மன்ன படைத்த உயிர்கள் அழிந்துவிட்ட நிலையில், அம்பிகை உமாதேவி இரவு பொழுதில் எம்பெருமான் சிவனை நினைத்து பூஜைகள் நடத்தினார். அவர் நான்கு ஜாமங்கள் ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்து வந்தார். பூஜை நடத்திய பிறகு அம்பிகை உமாதேவி சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் சூரியன் உதயமாகும் வரை பரமேஸ்வரனை நினைத்து பூஜைகள் செய்பவர்களுக்க அவர்களின் பாவங்கள் நீங்கி, இறுதியில் மோட்சம் கிடைக்க வேண்டும் என அருளினார். அதுமட்டுமல்லாமல் பரமேஸ்வரனை நினைத்து பூசித்த இந்த இரவை தேர்வளும், மனிதர்களும் சிவராத்திரி என்று அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிவபெமானும் அப்படியே நடக்கட்டும் என்று ஆசி வழங்கினார் என கூறப்படுகிறது. அதனால் தான் இதனை சிவராத்திரி என்று அழைப்பதாக ஐதீகம்.

அம்பிகை பூஜைகள் நடத்தினாலும் சிவபெருமானுக்கு நடத்தப்பட்டதால் இதனை சிவராத்திரி என்று அழைக்கிறோம்.

சிவன் பார்வதி திருமணம்

புராணங்களின் படி மகாசிவராத்திரி (maha shivaratri celebration) என்பது சிவபெருமான் அவரது மனைவி பார்வதியை இரண்டாவது முறையாக மணந்த நாள் என்று கூறப்படுகிறது. மகாசிவராத்திரி உருவான வரலாறுகளில் கூறப்படும் மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சிவலிங்கமாக தோன்றிய சிவன்

மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுவதற்கு மற்றொரு காரணம் என்று புராணங்கள் படி பார்த்தால், சிவபெருமான் முதன் முதலாக அவரை லிங்க வடிவில் வெளிப்படுத்தியதை தான் நாம் மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுவதாக கூறுப்படுகிறது.

மேலும் படிக்க: Chitra Pournami: சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்..!

மகாசிவராத்திரி விரதம் இருக்கும் முறைகள்

நாம் இந்த உலகத்தில் இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம் என்றால் எதற்காக, நாம் அன்றாட தேவைகளாக மதிப்பது என்ன? எதை நோக்கியது நம்முடைய வாழ்க்கை பயணம்? எதை நோக்கி ஓடி கொண்டு இருக்கின்றோம்? என அறியாமல், பணம் தான் எல்லாம் என ஒரு சிந்தனையில், பணம் இருந்தால் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும் என்ற ஒரு எண்ணமும் உள்ளது.

ஆனால் இந்த உலகத்தில் எதுவும் நிரத்தரமில்லை என சிவபெருமானை நினைத்து மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான விரதம் தான் இந்த மகாசிவராத்திரி. நம் அன்றாட தேவைகளாக மதிப்பது ஒன்று உணவு மற்றொன்று தூக்கம். இது இரண்டும் இல்லாமல் ஒரு மனிதனால் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது. ஆனால் இது இரண்டையும் மறந்து சிவபெருமானை நினைத்து அவரின் திருவடிகளை பற்று கொண்டு மனதை கட்டுப்படுத்ததும் விரதம் தான் இந்த மகாசிவராத்திரி.

maha shivaratri varalaru in tamil

மகாசிவராத்திரி விரதம் (Maha shivaratri vratham in Tamil) இருக்க நினைக்கும் சிவ பக்கதர்கள் அதற்கு முதலில் மனதை ஒருநிலைப்படுத்தி தயாராக வேண்டும். விரதத்திற்க்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அசைவ உணவை சாப்பிட்ட பிறகு சிவராத்திரி அன்று ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிவராத்திரி முதல் மூன்று நாட்கள் அசைவத்தை தவிர்ப்பது நல்லது.

மகாசிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து முக்கியமாக புஜை அறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு, ஒரு டம்ளரில் பால், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றை வைத்துவிட்டு வழிபட வேண்டும்.

மகாசிவராத்திரி அன்றிலிருந்து உணவருந்தாமல் சிவபெருமானின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் மனதிற்குள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவலாயம் சென்று அங்கு நடக்கும் 4 ஜாம பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவருக்கு நடக்கும் ஆரதனைகளை கண்குளிர பார்க்கலாம்.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு அருகில் இருக்கும் சிவபெருமான் கோயிலுக்கு சென்று ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆரதனைகளை பார்த்துவிட்டு அவைகள் முடிந்த பிறகு அங்கு கொடுக்கும் அன்னதானத்தை பெற்றுக்கொண்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோர்கள் பழங்களை மட்டும எடுத்துக்கொண்டு விரதம் தொடங்கலாம். பழச்சாறு, நீர் போன்றவற்றை அருந்திக்கொண்டு அன்று முழுவதும் விரத்தை தொடங்கலாம்.

அன்னதானம்

இதற்கு முன்பாக கோயில்களில் அன்னதானம் கொடுப்பதை வாங்கி உண்டோமானல் நம்முடைய விரதம் கலைந்துவிடும். மகாசிவராத்திரியில் இருந்த மறுநாள் காலை 4 மணி அளிவில் தான் விரதம் முடியும் அதுவரை உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். மறுநாள் காலை நம் வீட்டில் உணவு தயார் செய்து கொண்டு போய் மற்றவர்களுக்கும் வழங்கலாம் அல்லது கோயில் ஆராதனைகள் முடிந்த பின்பு நீங்கள் உணவை சாப்பிடலாம்.

மேலும் படிக்க: Tiruvannamalai Girivalam: மகத்துவம் நிறைந்த திருவண்ணாமலை கிரிவலம்..!

மகாசிவராத்திரி விரதம் பலன்கள்

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் (Maha Shivaratri Vratham Palangal in Tamil) நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு புது வாழ்வு கிடைக்கும்.

மகாசிவராத்திரி விரதம் சிவபெருமானை சாந்தமடைய செய்யும் ஒரு விரதமாகும். அன்றைய தினம் விரதம் இருந்தால் சிவபெருமானின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

மகாசிவராத்திரி விரதம் நமக்கு நினைத்த காரியம் நடக்க, இறுதியில் முக்தி நிலையை நமக்கு சிவபெருமான் அருளுவார்.

நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் நமக்கு கிடைக்கவும், நம்முடைய மனது ஒருநிலையில் இருப்பதற்கும் சிவபெருமான் ஆசி வழங்குவார்.

செய்யக்கூடாதவைகள் – Maha Shivaratri Fasting Rules in Tamil

ஒரு சிலர் மகாசிவராத்திரி அன்று கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக திரைப்படம் போன்றவற்றை பார்க்க கூடாது. மற்றும் ஏதேனும் ஆன்லைன் போன்ற விளையாட்டுகளை விளையாடக் கூடாது. இப்படி கண்விழிபதற்கு விரதம் எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் இறைவனின் அருள் கிடைக்க தான் சிவபெருமானை நினைத்து வழிபடுகிறோம். அன்றைய தினம் சிவனை வழிபடுவது அவரை நினைப்பது மட்டும் தான் நம் கடமையாக இருக்க வேண்டும்.

விரதம் முடிந்த மறுநாள் காலை நாம் தூங்க கூடாது. சாப்பிடலாம் ஆனால் தூங்க கூடாது.

மஹாசிவராத்திரி நாள் மற்றும் நேரம் – Maha Shivaratri 2024 Date and Time in Tamil

மஹாசிவராத்திரி 2024 மார்ச் 8, வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படும். மகா சிவராத்தி ரிநிஷிதா கால பூஜை நேரம் மார்ச் 09, 2024 அன்று 12:07 AM முதல் 12:56 AM வரை இருக்கும்.

மேலும் படிக்க: Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு..!

FAQS

1. சிவராத்திரியில் ஏன் தூங்கக்கூடாது?

மகாசிவராத்திரியில் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவது, ஒரு நல்ல பலனை கொடுக்கும். அன்றைய தினம் சிவ நாமத்தை கூறி கொண்டு கண் விழித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும்.

2. மகா சிவராத்திரி அன்று என்ன செய்வார்கள்?

மகா சிவராத்திரி அன்று மக்கள் இரவும்,பகலும் விரதம் இருப்பார்கள். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். லிங்கம் முன் பூஜைகள் செய்யப்படும். மக்கள் கங்கை நதியில் புனித நீரில் குளிப்பார்கள்.

3. மகா சிவராத்திரியில் எந்த நிறத்தை அணிய வேண்டும்? Which Colour to wear on Maha Shivratri?

பெரும்பாலான பக்தர்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் பல வண்ணங்களில் ஆடை அணிவார்கள்.

4.மகா சிவராத்திரி இரவை எப்படி கழிப்பது? How to spend Maha Shivratri night?

சிவ பக்தர்கள் சிவன் கோயில்களுக்குச் சென்று, சிவ அர்ச்சனை செய்து, சிவலிங்கத்திற்கு பால், நெய், மற்றும் பிற பொருட்களை வழங்குகின்றனர். சிவபக்தர்கள் அன்றைய தினம் முழு விரதத்தைக் கடைப்பிடித்து மறுநாள் காலை விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

5. சிவராத்திரியை வீட்டில் கொண்டாடுவது எப்படி? How to celebrate Shivaratri at home?

அதிகாலை எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்ய தொடங்குவார்கள். அன்றைய தினம் சிவநாமம் சொல்லிக்கொண்டு சிவாலயம் சென்று தரிசனம் செய்வது சிறப்பு.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular