Homeசமையல் குறிப்புகள்ஸ்ரீரங்கத்தின் பிரபலமான ஸ்வீட்..! குழந்தைகள் விரும்பும் பாரம்பரிய உக்களி செய்வது எப்படி..!

ஸ்ரீரங்கத்தின் பிரபலமான ஸ்வீட்..! குழந்தைகள் விரும்பும் பாரம்பரிய உக்களி செய்வது எப்படி..!

நம் தமிழ்நாட்டின் பல பாரம்பரிய உணவுகள் இந்த தலைமுறையினருக்கு தெரிவது இல்லை. பல உணவுகளை நாம் மறந்தே போய்விட்டோம். இது போன்ற நம் மறந்துப்போன உணவுகளில் ஒன்றுதான் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகையான உக்களி. நாம் மறந்துபோன இந்த இனிப்பை சமீபத்தில் வெளியான அன்னபூரணி படத்தில் நயன்தாரா சொல்லி நாம் கேள்வி பட்டு இருப்போம். இது நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஸ்வீட் அகும்.மேலும் இது ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரபலமான இனிப்பாகும். இப்போது நாம் இந்த பாரம்பரிய உக்களி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உக்களி செய்வது எப்படி (How To Make Ukkaali in Tamil)

தேவையான பொருட்கள் (Ukkali Ingredients)

  • ரவை – 2 கப்
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • வெல்லம் – 2 கப்
  • ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
இதையும் படியுங்கள்: அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

உக்களி செய்முறை (Ukkaali Recipe in Tamil)

  • உக்களி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் ரவை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
  • நாம் பிசைந்து வைத்த இந்த ரவை மற்றும் தேங்காய் கலவை குறைந்தது ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வேண்டும்.
  • இந்த கலவை ஒரு மணி நேரம் ஊறிய பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த ரவை கலவையை உதிரியாக எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • இப்போது இந்த கலவையை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கும் போது ரவை நன்றாக வெந்துவிடும். ரவை நன்கு வெந்த பிறகு இதில் சிறிதளவு ஏலக்காய் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இதனை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கும் போது தான் ரவை மாவு நன்றாக உதிரியாக வரும். இந்த ரவை உதிரியாக வரும் வரை நாம் நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்போது இறுதியாக நெய்யில் வருத்த மு்ந்திரியை சேர்க்கவும்.
  • இவ்வாறு செய்தால் சுவையான ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் இனிப்பு உக்களி ரெடி. குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உக்களி ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
Ukkaali Recipe in Tamil

நாம் இப்பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் உக்களி செய்வது எப்படி (Ukkaali Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம். இந்த உக்களி ஸ்ரீ ரங்கத்தில் மட்டுமின்றி சேலத்திலும் பிரபலமான ஒரு இனிப்பாக உள்ளது.

ஸ்ரீரங்கத்தின் பிரபலமான ஸ்வீட்..! குழந்தைகள் விரும்பும் பாரம்பரிய உக்களி செய்வது எப்படி..!

நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பும் பாரம்பரிய உக்களி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Type: Dessert

Cuisine: Tamil Nadu

Keywords: Ukkaali Recipe, Ukkaali

Recipe Yield: 5

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Semolina – 2 cups cup
  • Grated coconut – 1
  • Jaggery – 2 cups
  • Cardamom powder – 1 tablespoon
  • Ghee – required quantity
  • Oil – required amount
  • Cashew – as much as required

Recipe Instructions: உக்களி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் ரவை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். நாம் பிசைந்து வைத்த இந்த ரவை மற்றும் தேங்காய் கலவை குறைந்தது ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வேண்டும். இந்த கலவை ஒரு மணி நேரம் ஊறிய பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த ரவை கலவையை உதிரியாக எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்போது இந்த கலவையை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கும் போது ரவை நன்றாக வெந்துவிடும். ரவை நன்கு வெந்த பிறகு இதில் சிறிதளவு ஏலக்காய் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கும் போது தான் ரவை மாவு நன்றாக உதிரியாக வரும். இந்த ரவை உதிரியாக வரும் வரை நாம் நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது இறுதியாக நெய்யில் வருத்த மு்ந்திரியை சேர்க்கவும். இவ்வாறு செய்தால் சுவையான ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் இனிப்பு உக்களி ரெடி. குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உக்களி ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு இருக்கீங்களா? ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular