Homeலைஃப்ஸ்டைல்Womens Day Wishes In Tamil..! உங்களில் பாதியாக உள்ள உங்கள் இறைவிகளுக்கு மகளிர் தின...

Womens Day Wishes In Tamil..! உங்களில் பாதியாக உள்ள உங்கள் இறைவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்..!

வருடம் தோறும் மகளிர் தினம் மார்ச் மாதம் 8-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உடல் அளவில் உறுதியானவர்கள் என்று சொல்லப்படும் ஆண்களை விடவும் மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள் தான். நம் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை பெண் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்ற நிலை தான் தற்போது வரை உள்ளது. ஒரு பெண்ணானவள் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்து தாயாக இருக்கிறாள். நம் வாழ்வில் துணையாக மனைவியாக இருக்கிறாள். மேலும் தங்கை, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் தான் பெண்கள். இவ்வளவு சிறப்பு மிக்க பெண்களை நாம் ஒரு நாள் கூட வாய்விட்டு பாராட்டியது இல்லை என்று தான் கூறவேண்டும். இதற்காக தானே என்னவோ இந்த மகளிர் தினம் (Magalir Thina Valthukkal) வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நம்முடன் துணையாக இருக்கும் பெண்களை கொண்டாடும் நாள் இன்று. எனவே இப்பதிவில் மகளிர் தினத்தை கொண்டாடும் கவிதைகள் மற்றும் புகைப்படங்களை (Womens Day Wishes In Tamil) பார்க்கலாம்.

Table of Contents

மகளிர் தின வாழ்த்துக்கள் (Happy women’s day wishes)

மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Wishes)

Womens Day Wishes in Tamil

எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் உன்னத படைப்பு, பெண்கள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

தனித்துவமான மகளிர் தின வாழ்த்துக்கள் (Unique Women’s Day Wishes Images)

Unique Women's Day Wishes Images

கருதனில் மங்கையராய் பிறந்து, வயற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டி, முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையருக்கு, மகளிர் தினம் ஒரு இனிய சமர்பணம்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

மகளிர் தின வாழ்த்து படங்கள் (Womens Day Wishes Images)

Womens Day Wishes Images

உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

சக ஊழியர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Women’s Day Wishes to Colleagues)

Women's Day Wishes to Colleagues

என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள் 2024 (Women’s Day 2024 Wishes)

Women's Day 2024 Wishes

பெண்கள் எதிர்பார்பதெல்லாம் சின்னதாய் ஒரு சிரிப்பும்,
சினேகமாய் ஒரு பார்வையும், அக்கறையாய் சிறு நலம் விசாரிப்புகளும் மட்டுமே.
ஆகவே பெண்கள் தினம் கொண்டாட வேண்டுமென்றால்
அனுதினமும் கொண்டாடுவோம்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

Women’s Day Wishes Quotes

Women's Day Wishes Quotes

ஒவ்வொரு இளவரசனும் தன் இளவரசியைத் தேடுகிறான். எனக்கு அதிர்ஷ்டம், என்னுடை இளவரசியை நான் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டேன்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் (International Women’s Day Wishes)

International Women's Day Wishes

க‌ண்ணிய‌ம் மிக்க‌
பெண்ணிய‌த்தைப்
போற்றுவோம் எந்நாளுமே!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Wishes Happy Womens Day

Wishes Happy Womens Day

காற்றே போ இன்று என் இனியவளுக்கான நாள்.
அன்பு என்றால் தாய்மை ஆவாள்
அவள் என்றால் மங்கை ஆவாள்!
மணம் என்றால் மனைவி ஆவாள்!
இரவு என்றால் நிலவு ஆவாள்!

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 2024 (Happy Women’s Day 2024 Wishes)

Happy Women's Day 2024 Wishes

சொந்தங்களைப் பிரிந்து, கைபிடித்த காரணத்தால்
உலகின் கடைசி வரைகூட வரும் என் மனைவி
தேவதையாய் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள்..
என்னவளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Women’s Day Wishes to Wife)

Women's Day Wishes to Wife

அன்பு மனைவிக்கு
தரணி பார்த்த தாரகையே! தூரிகை தீட்டா ஓவியமே!
போராடும் வர்கத்தின் பிரதிநிதியே! கொஞ்சம் இளைப்பாறவும் கற்றுக்கொள்!
என் வாழ்வில் நீ என்றும் நிறைந்திருக்க விரும்புகிறேன்!
என்னவளுக்கு, இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் (Happy Women’s Day Wishes to All Ladies)

Happy Women's Day Wishes to All Ladies

பெண்ணாக பிறந்ததில்
பெருமை கொள்கிறேன் மகளிர் தின வாழ்த்துக்கள்!
தோழிகளே

ஊக்கமளிக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் (Inspirational Women’s Day Wishes)

Inspirational Women's Day Wishes

பெண்ணுக்கு மஞ்சள் கயிறு தரும் மங்கலத்தையும், மரியாதையையும் மின்னும் மஞ்சள் தங்கம் தருவதில்லை. சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

Women’s Day Wishes for Wife

Women's Day Wishes for Wife

பெண்மையின் தாய்மையில்
மழலையின் மனமும் மயங்கும்
ஆண்கள் என்ன விதிவிலக்கா?
மகளிர் தின வாழ்த்துக்கள்

Womens Day Wish for Wife

Womens Day Wish for Wife

நான் கோவத்தில் இருந்தாலும்
சோகத்தில் இருந்தாலும்
உன் பார்வை ஒன்று போதுமடி…
மகளிர் தின வாழ்த்துக்கள்

அம்மாவுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Wishes to Mom)

Womens Day Wishes to Mom

மறுபிறவி என்று தெரிந்தும், குழந்தையை ஈன்றெடுக்க, துணிவு கொள்ளும் பெண்மையின் முன்… ஆணின் வீரம் தோற்று தான் போகிறது…! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Happy Women’s Day Wishes to Wife

Happy Women's Day Wishes to Wife

நீ என் வாழ்க்கையில் வந்த அந்த நாள், என் வாழ்க்கை அழகாக மாறியது … உலகின் மொத்த மகிழ்சியையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன்… இன்று மட்டும் அல்ல… என் மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்”

Happy Womens Day Wishes Quotes

Happy Womens Day Wishes Quotes

கருவில் அரும்பி உருவம் தரித்து
பருவம் அடையுமுன் பலபல பக்குவங்கள் பதறாமல் பெறுபவள்!
அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற வண்ணத் தேர்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Women’s Day Wish for Mother

Women's Day Wish for Mother

அன்பு நிறைந்த பெண்ணின் அன்பு மனிதனை மேலும் மனிதனாக்குமாம்!
என்னை மனிதனாக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அன்பான வாழ்த்துக்கள்!

Women’s Day Wishes For Girlfriend

Women's Day Wishes For Girlfriend

எனக்கான வரமாக பிறந்தாயடி
தவன் ஏதும் புரியாமல் கிடைத்தாயடி
நீயின்றி நான் வாழ முடியாதடி …
என்னவளே உன்னவனின் ….
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

தோழிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Women’s Day Wishes for Friend)

Womens Day Wishes for Best Friend

அன்புள்ள தோழியே… நீங்கள் எனக்கு பெண்மையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் என் திறமைக்கு ஏற்றவாறு என்னை வாழ வைத்ததற்கு நன்றி இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

சிறப்பு மகளிர் தின வாழ்த்துக்கள் (Special Women’s Day Wishes)

Special Women's Day Wishes

ஒரு பெண் சத்தமாக சிரிக்கிறாள் என்றால் அவள் சத்தமின்றி அழுகிறாள் என்று அர்த்தம்… தன்னை சேர்ந்தவர்களுகாகவே வாழும் பெண்கள் தேவதைகள் தான்… இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

இதையும் படியுங்கள்: 100+ Beautiful Baby Girl Names in Tamil..! பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்..!

சகோதரிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Women Day Wishes for Sister)

Women Day Wishes for Sister

அன்பு சகோதரியே..
நீ என் சகோதரி மட்டுமல்ல, என் தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் நண்பர் என அனைத்துமாய் இருக்கிறாய்.. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

ஆசிரியைக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Women’s Day Wishes for Teacher)

Women's Day Wishes for Teacher

என் அன்பான ஆசிரியருக்கு… நீங்களும் உங்கள் பணியும் அங்குள்ள அனைத்து இளம் பெண்களுக்கும் ஒரு உத்வேகமாகவும் உதாரணமாகவும் இருக்கும்… உங்களுக்கு உங்கள் மாணவனின் மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

சிறந்த நண்பருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Wishes for Best Friend)

Women's Day Wishes for Friend

என் அன்பு தோழியே… வாழ்க்கையில் உனக்கு எவ்வளவு துன்பம் இருந்தாலும், அதை எதிர்த்துப் போராட நீ எழுந்து நிற்கிறாய்… உன்னுடன் ஒரு தோழனாக நானும் இருப்பேன்..
மகளிர் தின வாழ்த்துக்கள்!

நாம் இப்பதிவில் மகளிர் தினத்திற்கான வாழ்த்துக்களை புகைப்படத்துன் பார்த்துள்ளோம். இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: பிளம் கேக் செய்வது எப்படி..? How to Make Plum Cake Recipe in Tamil..!

மகளிர் தினம் – FAQ

1. எந்த ஆண்டு முதல் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது?

1910-ம் ஆண்டு முதல் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

2. மகளிர் தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

மகளிர் தினம் மார்ச் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

3. மகளிர் தினத்தை அறிவித்தது யார்?

கிளாரா ஜெட்கின் 1910-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முதல் முறையாக அறிவித்தார்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular